ராசிபுரத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்


ராசிபுரத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
x
தினத்தந்தி 7 April 2022 12:00 AM IST (Updated: 7 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

ராசிபுரம்:
ராசிபுரத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை அதிக ஒலி எழுப்புவதால் பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் மற்றும் போக்குவரத்து துறையினர் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை அவர்கள் அகற்றினர். மேலும் டிரைவர்களிடம் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

Next Story