நாமக்கல்லில் மாநில வில்வித்தை போட்டி


நாமக்கல்லில் மாநில வில்வித்தை போட்டி
x
தினத்தந்தி 7 April 2022 12:00 AM IST (Updated: 7 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மாநில வில்வித்தை போட்டி நடந்தது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான மாநில அளவிலான வில்வித்தை தேர்வு போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) சிவரஞ்சன் தொடங்கி வைத்தார். 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு இண்டியன், ரீக்கோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 18 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எடுத்த புள்ளிகள் விவரம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புள்ளிகளின் அடிப்படையில் அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் கேசவன், கண்ணன் ஆகியோர் நடத்தினர்.

Next Story