கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த மார்ச் மாதம் ரூ.1¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
கரூர்,
கரூர் உழவர் சந்தை
கரூர் பழைய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 60 காய்கறி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைக்கு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாங்கல், நெரூர், மண்மங்கலம், வெள்ளியணை, காணியாளம்பட்டி, சக்கரக்கோட்டை, மாயனூர் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தை மூலமாக நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள்.
ரூ.1¾ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 990 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவர்கள் 449.922 டன் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 715 ஆகும். உழவர் சந்தைக்கு 74 ஆயிரத்து 982 நுகர்வோர் வருகை புரிந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 604 டன் காய்கறிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 77 லட்சம் ஆகும்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3,849 விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்தனர். அதனை 1 லட்சத்து 679 நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி பயன் அடைந்தனர் என்று உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story