கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்
கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலையார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் புதிதாக கோபுரங்கள், சிற்பங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 30-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. ஹோம பூஜைகள், யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மூலவர் விமானம், அம்பாள் பரிவார சன்னதிகளின் விமான கலசங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி ராஜ அலங்காரத்தில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடந்தது. இதில் கல்லாங்குளம், புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி, தேங்கல்பாளையம், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story