நாமக்கல் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்: தனியார் பஸ் கம்பெனி மேலாளர் சாவு
நாமக்கல் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் தனியார் பஸ் கம்பெனி மேலாளர் பலியானார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது64). அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நாமக்கல் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் பின்னால் வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story