100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து சாலை மறியல்


100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 7 April 2022 12:17 AM IST (Updated: 7 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே 100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. அப்போது பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கலசபாக்கம்

கலசபாக்கத்தை அடுத்த மேல்வன்னியனூர் கிராமத்தில் வீட்டுவரி, குழாய்வரி செலுத்தாதவர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டையை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story