பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காட்டுமன்னார்கோவில் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கலியமலை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகள் ஜெயவர்த்தினி(வயது 17). சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்காக தனது வீட்டின் மாடிக்கு சென்ற ஜெயவர்த்தினி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது. அங்கே கொட்டகையில் ஜெயவர்த்தினி தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயவர்த்தினியை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஜெயவர்த்தினியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story