தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். அமைச்சர் காந்தி அறிக்கை


தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். அமைச்சர் காந்தி அறிக்கை
x
தினத்தந்தி 7 April 2022 12:47 AM IST (Updated: 7 April 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் அவரவர் பகுதியில் உள்ள ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பகுதியில் பொதுமக்கள் வெயில் தாகம் தீர்க்கும் வகையில் எந்த இடையூறும் இல்லாமல், சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்த்திட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story