மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கள்ளக்குறிச்சி,
-
கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 55). இவர் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை 5 மணிக்கு நீலமங்கலம் சாலையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
மேலும் சண்முகம், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் அருகே துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (20), ராஜ்குமார் (21) ஆகியோர் பலத்த காயமடைந்தனா்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக சண்முகத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சண்முகத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோருக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story