கொடுமுடியில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்


கொடுமுடியில்  கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 1:44 AM IST (Updated: 7 April 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடியில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

கொடுமுடி புதிய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். 
ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டரையும், மோட்டார்சைக்கிளையும் மாலை அணிவித்து நிறுத்தியிருந்தார்கள். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

Next Story