ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33-க்கு விற்பனை டீசல் விலை ரூ.101 தாண்டியது


ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33-க்கு விற்பனை டீசல் விலை ரூ.101 தாண்டியது
x
தினத்தந்தி 7 April 2022 1:53 AM IST (Updated: 7 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 111 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் விலையும் ரூ.101-யை தாண்டியது.

ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 111 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் விலையும் ரூ.101-யை தாண்டியது.
வரலாறு காணாத உச்சம்
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை கடந்த சில நாட்களாக தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 2 நாட்கள் தவிர மீதமுள்ள நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
தினமும் விலை உயர்த்தப்படுவதால் வரலாறு காணாத உச்சத்தை பெட்ரோல்-டீசல் விலை எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த விலை ஏற்றத்தின் காரணமாக விலைவாசியும் அதிகமாவதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
75 காசுகள் உயர்வு
இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று முன்தினம் 110 ரூபாய் 58 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 75 காசுகள் உயர்ந்து 111 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையானது.
இதேபோல் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 101 ரூபாய் 44 காசுகளுக்கு விற்பனையானது. கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story