ரூ.5 லட்சம் மருத்துவ கருவிகள் திருட்டு


ரூ.5 லட்சம் மருத்துவ கருவிகள் திருட்டு
x
தினத்தந்தி 7 April 2022 1:57 AM IST (Updated: 7 April 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகள் திருட்டுப்போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில்  ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ கருவிகள் திருட்டுப்போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தனியார் ஆஸ்பத்திரி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதி மைனர் பங்களா அருகில் தனியாருக்குச் சொந்தமான ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் உதவி மேலாளர் சத்யபிரகாஷ்(வயது32)  பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது 
 எங்கள் ஆஸ்பத்திரியில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் எட்வின்ராஜா (35) லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். 
வழக்குப்பதிவு
அவர் வேலை செய்து வந்த காலத்தில் ஆஸ்பத்திரியில் உள்ள இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பலூன், ஸ்டென்ட் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நிர்வாகத்திற்கு தெரியாமல் வெளியில் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே லேப் டெக்னீசியன் எட்வின் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன்பேரில் போலீசார் எட்வின்ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Next Story