சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரத்தை நிறுத்தியவர் மீது வழக்கு
சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரத்தை நிறுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மாங்கொட்டை தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் இளையராஜா(வயது 40). இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளையராஜா தனது பொக்லைன் எந்திரத்தை கல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் நிறுத்தினார். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல வழியின்றி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story