பிரதமர் மோடியின் நடவடிக்கையால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது; மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாடு தற்சார்பு அடைய வேண்டும் என்பதற்காக எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தியுள்ளார். அதற்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். காங்கிரசாருக்கு வேலை இல்லாததால் மத்திய-மாநில அரசுகளை தேவையின்றி குறை சொல்கிறார்கள். மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத இடங்களில் ஒலியை பயன்படுத்த கோர்ட்டே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மந்திரி பதவி, எம்.எல்.ஏ. பதவி எனது தாத்தா சொத்து அல்ல. தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி டிக்கெட் வழங்காவிட்டால் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துவேன்.
பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் நடவடிக்கையால் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது. மத்தியில் வேறு கட்சிகளின் ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200-ஐ தாண்டி இருக்கும்.
இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.
Related Tags :
Next Story