கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டை 2 வாரங்களுக்கு முன்பே தொடங்க முடிவு; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்


கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டை 2 வாரங்களுக்கு முன்பே தொடங்க முடிவு; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்
x
தினத்தந்தி 7 April 2022 2:29 AM IST (Updated: 7 April 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டு 2 வாரங்களுக்கு முன்பே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கற்றல் சீர்திருத்தம்

  கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கற்றல் சீர்திருத்தம் என்ற பெயரில் மாநில அளவிலான கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்து கொண்டு அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  கொரோனா பரவல் காரணமாக கல்வித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களின் கற்றல் காலத்தில் மதிப்புக்க மிக்க 2 ஆண்டுகளை இழந்துவிட்டனர். இதை சரிப்படுத்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதே நேரத்தில் அதை செய்வது அசாத்தியமானதும் அல்ல. அதன்படி மாநில அரசு கற்றல் சீர்திருத்தம் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

சிறப்பு மிக்க ஆண்டு

  நடப்பு 2022-ம் ஆண்டு கற்றல் சீர்திருத்த ஆண்டு என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மத்திய-மாநில அரசுகள் நடத்திய ஆய்வில், கற்றலில் குழந்தைகள் சற்று பின்தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை சரிசெய்யும் பணியில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் இந்த ஆண்டை சிறப்பு மிக்க மிக்க ஆண்டு என்று கருதி கற்பித்தலில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

  இந்த முறை நடப்பு கல்வி ஆண்டு 2 வாரங்களுக்கு முன்பாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கற்றல் சீர்திருத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். கற்றலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்யும் திறன் குழந்தைகளுக்கு உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனும் வேறுபட்டு உள்ளது. இந்த கற்றல் சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசும் இதை பாராட்டியுள்ளது.
  இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.

Next Story