ராமசாமி கோவில் பின்புற கோட்டை வாசல் குப்பை மேடாக மாறும் அவலம்


ராமசாமி கோவில் பின்புற கோட்டை வாசல் குப்பை மேடாக மாறும் அவலம்
x
தினத்தந்தி 7 April 2022 3:07 AM IST (Updated: 7 April 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம் ராமசாமி கோவில் பின்புறம் உள்ள கோட்டை வாசல் குப்பை மேடாக மாறும் அவலநிலையில் உள்ளது.

தக்கலை:
பத்மநாபபுரம் ராமசாமி கோவில் பின்புறம் உள்ள கோட்டை வாசல் குப்பை மேடாக மாறும் அவலநிலையில் உள்ளது.
ராமசாமி கோவில்
பத்மநாபபுரத்தில் பிரசித்திபெற்ற ராமசாமி கோவில் உள்ளது, ராமபிரான் சீதாதேவியுடன் காட்சி தரும் இக்கோவில் உள்பிரகாரத்தை சுற்றிலும் ராமாயண கதையை விளக்கும் மரசிற்பங்கள் உள்ளன, வைகுண்ட ஏகாதேசியின்போது லட்சதீபங்கள் ஏற்றும் சிறப்புவாய்ந்த பழமையான இக்கோவில் நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் உள்ளது, 
இக்கோவில் தெப்பக்குளம் நீண்டகாலம் தூர்வாராமல் பாசி படர்ந்து தண்ணீர் அசுத்தமாகி யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. 
கோட்டை வாசல்
மேலும் காலை, மாலை வேளையில் பூஜை நடக்கும்போது பக்தர்கள் வந்து செல்லும் கோவில் பின்புற கோட்டை வாசல் படிகட்டுகள் உடைந்து சேதமடைந்துள்ளது. 
அதன் இருபுறமும் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி குப்பைமேடாக காட்சியளிக்கிறது, தற்போது இக்கோவிலில் பங்குனி திருவிழா நடந்துவரும் நிலையில் இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இது மனவேதனையை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story