கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருேக கிணற்றில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
சிவகாசி,
ஸ்ரீவில்லிபுத்தூர் விழுப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 64). இவர் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆடைகள் தோட்டத்தின் கிணற்று தண்ணீரில் மிதப்பதை சக தொழிலாளர்கள் கணேசன், கருப்பையா ஆகியோர் பார்த்துள்ளனர்.பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மாரனேரி போலீஸ் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் தேடிய போது ராமர் உடல் கிடைத்தது. உடலில் லேசான காயம் இருந்தது.இதை தொடர்ந்து ராமரின் மனைவி பொன்னுத்தாய் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கிணற்றில் தவறி விழுந்து ராமர் இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story