கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது.
கடையம்:
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலைப்பகுதியில் உள்ள சில மரங்கள், கோரைப்புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோரணமலை பீட் கன்னிமாரம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பிடித்தது.
இதுகுறித்து தகவலறிந்த அம்பை வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி வனத்துறையினர் களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் 4 குழுக்களாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சில அரிய வகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு எவ்வாறு தீப்பிடித்து என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story