பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:-
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேச்சுப்போட்டி
காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம், அவர்களுடைய பிறந்தநாளினை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துைற சார்பில் நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.
தேதி-நேரம்
போட்டி நடைபெறும் தேதி, இடம், நேரம் மற்றும் விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும். கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
===
Related Tags :
Next Story