கடைகளில் மராத்தி பெயர் பலகை- மும்பை மாநகராட்சி உத்தரவு
கடைகளில் மராத்தி பெயர் பலகை தொடர்பாக மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு சமீபத்தில் அனைத்து விதமான கடைகளின் பெயர் பலகையும் மராத்தியில் இருக்க வேண்டும் என சட்டத்திருத்தம் செய்தது. இந்த திருத்தத்தின்படி 2 அல்லது 3 பேர் வேலை பார்க்கும் சிறிய கடைகளிலும் கூட மராத்தியில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும். இதேபோல பெயர் பலகையில் மற்ற மொழிகளை விட மராத்தி எழுத்து பெரிதாக இருக்க வேண்டும் என கூறியிருந்தது.
இந்தநிலையில் இதுதொடர்பான உத்தரவை மும்பை மாநகராட்சியும் நகரில் உள்ள கடைகளுக்கு பிறப்பித்து உள்ளது. இதேபோல மதுக்கடைகளுக்கு பழம்பெரும் நபர்களின் பெயர், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகளின் பெயர்களை வைக்கவும் தடை விதித்து உள்ளனர்.
Related Tags :
Next Story