மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

வீரபாண்டி, அல்லிநகரம் பகுதிகளில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அல்லிநகரம்: 

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி வயல்பட்டி ரோட்டில் மது விற்ற தேனி பங்களா மேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1,100 பறிமுதல் செய்தனர்.

 இதேபோல் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அல்லிநகரம் அண்ணா தெருவை சேர்ந்த கருத்தபாண்டி (39) என்பவரை பிடித்தனர். மதுராபுரி மின்வாரிய அலுவலகம் அருகில் புகையிலை பொருட்கள் விற்ற பெரியகுளத்தை சேர்ந்த சாகுல் (43) என்பவரை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.5,200 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

Next Story