முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 April 2022 7:14 PM IST (Updated: 7 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

கூடலூர்

கூடலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் மாதாந்திர சஷ்டி விழாவையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து 11 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சன்னிதானத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story