மணவாளக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


மணவாளக்குறிச்சியில்   தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2022 8:03 PM IST (Updated: 7 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி, 
மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது62), கூலித்தொழிலாளி. இவரது மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், சுந்தரம் மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று மாலையில் இவரது குடும்பத்தினர் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுந்தரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்றவர்கள் திரும்ப வந்த போது சுந்தரம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story