சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்கள்


சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 7 April 2022 8:59 PM IST (Updated: 7 April 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

சங்கமங்கலம் ஊராட்சியில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கல்:
சங்கமங்கலம் ஊராட்சியில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்த மின்கம்பங்கள்
நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி பழையனூர்‌-பெருங்கடம்பனூர் சாலையில் நீலியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
இந்த சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் மின்கம்பிகள் சாலையின் நடுவே தாழ்வாக செல்கின்றன.
தீவிபத்து ஏற்படும் அபாயம்
இந்த வழியாக பெருங்கடம்பனூர், நாகூர், ஆழியூர், சிக்கல், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். 
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளில் வாகனங்கள் உரசி தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.
நடவடிக்கை 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இதை கவனித்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
---


Next Story