இளநிலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவு தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:-
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்துவதை கண்டித்தும், முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பதை கண்டித்தும் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ம.தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீதரன் (நாகை), தமிழ்ச்செல்வன் (தஞ்சை தெற்கு), மார்கோனி (மயிலாடுதுறை), அம்பலவாணன் (காரைக்கால்), துரைசிங்கம் (தஞ்சை மாநகரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆசைதம்பி, மாநில மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரத்து செய்ய வேண்டும்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு நுழைவு தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்முருகன் வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story