சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தில் சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கலை குழுவினர் கலந்து கொண்டு சாராயம் குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் துண்டுபிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கச்சிராயப்பாளையம் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மியாட்மனோ, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story