மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
குளித்தலையில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
குளித்தலை,
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, ராணி, வட்டார கல்வி அலுவலர் ரமணி, குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டனர்.
இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் 123 பேர் பரிசோதனை செய்துகொண்டனர். தனியார் நிறுவனத்திலிருந்து 34 பேருக்கு அளவீட்டு மதிப்பீடும் செய்யப்பட்டது. புதிய தேசிய அடையாள அட்டைக்கு 21 பேரும், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தலுக்கு 10 பேரும், யூ.டி.ஐ. அட்டை 17 பேரும், உதவி உபகரணத்திற்கு 13 பேரும், காது கேட்கும் கருவிக்கு 2 பேரும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாட்டினை குளித்தலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராகுகாலம், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story