தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 10:16 PM IST (Updated: 7 April 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு கட்டணம் உயர்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுக் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டண உயர்வுகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், தஞ்சை சரபோஜி அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் அர்ஜூன் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகி பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆறு‌.பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார்.
முற்றுகை போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தினேஷ் நன்றி கூறினார்.
"பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) இந்திய மாணவர் சங்கம் மாணவர்களைத் திரட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story