மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 10:42 PM IST (Updated: 7 April 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஆரணி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக ஆரணி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மனைகளில் அடையாள அட்டை, மருத்துவச் சான்று வழங்க காலதாமதம் செய்வதை கண்டித்தும், அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ், ெரயில்களில் இலவச பயணம் செய்ய அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி இருப்பதை கண்டித்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் இல்லாததால் நேர்முக உதவியாளர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Next Story