திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?


திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 7 April 2022 11:14 PM IST (Updated: 7 April 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன் கோவில் திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாசன வாய்க்கால்
 சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் திருநகரி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி வைத்தீஸ்வரன்கோவில், எடகுடி வடபாதி, கரைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். 
இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் மழை காலங்களில் உடைப்பு ஏற்பட்டு விளக்கு முகதெரு, காந்தி நகர், ரெயில்வே ரோடு, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. 
ஆகாய தாமரைகள்
மேலும், இந்த வாய்க்காலில் அதிகளவு ஆகாயத் தாமரைகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story