கிரிவலப்பாதை தூய்மைபணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மாபெரும் கிரிவலப்பாதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மாபெரும் கிரிவலப்பாதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
கிரிவலப்பாதை தூய்மை பணி
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மாபெரும் கிரிவலப்பாதை தூய்மை பணிக்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் காவல் துறை, மருத்துவத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சித்ரா பவுர்ணமி
இந்த ஆண்டிற்காக சித்ரா பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 2.32 மணியளவில் தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 1.17 மணி வரை உள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடத்து செல்ல வசதியாக அனைத்து கோபுர நுழைவு வாயில்களிலிருந்து நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
3 இடங்களில் இளைப்பாறும் கூடங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீர் மோர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமி நாட்களில் கோவிலின் உட்புறத்திலும், நகரம் முழுவதிலும் 24 மணி நேரமும், தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை சுற்றும் பாதையில் மின் விளக்குகள் அனைத்தும் தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை பணி
மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையில் வருகிற 10-ந் தேதி மாபெரும் தூய்மை பணி நடைபெற உள்ளது.
இதில் 1,220 பேர் ஈடுபட உள்ளனர். கிரிவலப்பாதை நகராட்சி மற்றும் ஊராட்சியில் வருவதால் நகராட்சியில் 6 குழுக்களும், ஊராட்சிகள் சார்பில் 10 குழுக்களும் அமைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் தூய்மை அருணை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பல்வேறு கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பணி 10-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற உத்தேசிக்கப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையை தூய்மையாக பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திவேல்மாறன், ஆறுமுகம், மற்றும் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்
சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்கள் தங்களது பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், பிற தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்களை தங்களது இடங்களுக்கு எடுத்து செல்ல துணிப்பைகள், சணல் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குபையுடன் வருகை புரிந்து பங்கு கொள்ள வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story