குன்றாண்டார்கோவில் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆய்வு
சத்துணவு மையங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆய்வு செய்தார்.
கீரனூர்:
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள லெக்கணாப்பட்டி உயர்நிலைப்பள்ளி, பாதிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகா ராணி ஆய்வு செய்தார். பின்னர் சத்துணவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களையும் பார்வையிட்டார். லெக்ணாப்பட்டி, பாதிப்பட்டியில் உள்ள புதிய கட்டிடங்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அருண் முருகானந்தம், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story