அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின கொண்டாட்டம்
அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தின கொண்டாட்டப்பட்டது.
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினம் கொண்டாடப் பட்டது. இதற்கு டாக்டர் பெரியசாமி தலைமை தாங்கினார். டாக்டர் மாதினி முன்னிலை வகித்தார். டாக்டர் முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், ஆலங்குடி நகர பஞ்சாயத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு ரத்த சோகை கண்டறியப்பட்டு அதற்கான மருத்துவம் மற்றும் அனைவருக்கும் சுகாதார சான்றிதழ்கள், சுகாதாரம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக பரிசாக பெண் ஊழியர்கள் அனைவருக்கும் சேலை வழங்கப்பட்டது. இதில் டாக்டர்கள் விவேக், மணிவண்ணன், கீதா, செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story