துறவுமேல் அழகர் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு


துறவுமேல் அழகர் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 7 April 2022 11:23 PM IST (Updated: 7 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

துறவுமேல் அழகர் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மீன்சுருட்டி
பால்குடம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் வடக்கு எல்லையாக விளங்கக்கூடிய சலுப்பை கிராமத்தில் அமைந்துள்ளது துறவு மேல் அழகர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மற்றும் தைப்பூசத் திருநாளில் ஜோதி ரூபமாக துறவு மேல் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி மாதம் சலுப்பை கிராமத்தில் உள்ள துறவு மேல் அழகர் கோவிலுக்கு தஞ்சை மாவட்டம், நெய்க்குப்பை கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் குல தெய்வமாக உள்ளதால் அனைவரும் துறவு மேல் அழகர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவின் துவக்கமாக காலை கலச பூஜை நடைபெற்று பின்னர் பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். 
பக்தர்கள் வழிபாடு
அதனை தொடர்ந்து கலசத்தை எடுத்து கோவில் பிரகாரம் சுற்றி வந்து அபிஷேகம் செய்தும் மாலை வேளையில் துறவு மேல் அழகர் கருவறையிலிருந்து உலக புராதான சின்னமான யானை சிலை வரை சுமார் 600 மீட்டர் கற்பூரத்தால் ஜோதி ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதைதொடர்ந்து கோவிலிலுள்ள ஐந்து அடி விளக்கில் ஜோதி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு ஜோதி ரூபமாக துறவு மேல் அழகர் காட்சி தருவார். இந்த பங்குனி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து துறவு மேல் அழகரை வழிபட்டு சென்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
1 More update

Next Story