20 கிலோ மீன்கள் பறிமுதல்
கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்கள் பார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லிங்க வேலு தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மண்டபம் மீன் துறை அதிகாரிகளும் இணைந்து மண்டபம் மீன் மார்க்கெட் பகுதியில் அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இறால் மீன்கள் அழுகிய நிலையில் கெட்டு போயிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை குழி தோண்டி புதைத்து அதிகாரிகள் அழித்தனர். இதேபோல் உச்சிப்புளி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story