பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் பறிமுதல். டிரைவரின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது
பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஜவ்வாதுமலை புலியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மினி சரக்கு வேனில் சென்றபோது விபத்துக்குள்ளாகி 11 பேர் இறந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் இலக்கிய திருவிழா மற்றும் புத்தக கண்காட்சிக்கு லக்கிநாயக்கன்பட்டி அரசு பள்ளி மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். இதுகுறித்து படத்துடன் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.
உடனடியாக மாணவர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் டிரைவரின் ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.கே.காளியப்பன், வாணியம்பாடி, ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர்களை கொண்டு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, கந்திலி, பச்சூர் டோல்கேட் பகுதிகளில் வாகன தணிக்கை செய்து சரக்கு வேனில் ஆட்களை அழைத்து சென்றவர்கள் மீதும், தகுதிச்சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், இல்லாமல் இருந்த பள்ளி வாகனங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரி செலுத்தாமல் வந்த வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ரூ.3 ஆயிரம் வரி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .
Related Tags :
Next Story