கள்ளநோட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது


கள்ளநோட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 11:33 PM IST (Updated: 7 April 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு பகுதியில் கள்ளநோட்டு வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு: 

வருசநாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த ஜனவரி 27-ந்தேதி நந்தனார்புரம் கிராமத்தை சேர்ந்த தவம் (வயது 43) என்பவர் மதுபாட்டில் வாங்கினார். அவர் கொடுத்த 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருசநாடு போலீசார் அங்கு விரைந்து சென்று தவத்தை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வருசநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பெரியகருப்பன் (53), ராஜ்குமார் (22), செல்வம் (45) மற்றும் வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (28) ஆகியோரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ளநோட்டு பெற்றதாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் ராஜ்குமார் மற்றும் செல்வத்தை கைது செய்தனர். 

மேலும் தலைமறைவாக இருந்த பெரியகருப்பன், செல்வராஜ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் பெரியகருப்பன் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து செல்வராஜை போலீசார் தேடிவந்தனர். 

இந்த நிலையில் வருசநாடு பகுதியில் சுற்றி திரிந்த செல்வராஜை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 100, 200 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story