கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்ட இரும்புலிக்குறிச்சி, செந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மிளகாய் பொடி வீசி இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த செந்துறை பூமுடையான் குடிகாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சொக்கு என்ற ராஜேஷ்(27), பூமுடையான் குடிகாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னு என்ற ராஜேஷ்(24) ஆகிய 2 பேரையும் கடந்த ஜனவரி மாதம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சின்னு மீது வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்த வழக்கும் உள்ளது. மேலும் இவர்கள் 2 பேர் மீது விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சொக்கு, சின்னு ஆகிய 2 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் மற்றும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தினால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று சொக்கு, சின்னு ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று வழங்கினர்
Related Tags :
Next Story