ஏரியில் ஆக்கிரமித்து செய்யப்பட்ட பயிர்கள் அகற்றம்
ஏரியில் ஆக்கிரமித்து செய்யப்பட்ட பயிர்கள் அகற்றப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கந்திலி ஒன்றியத்தில் உள்ள கிழக்கு பதனவாடி ஊராட்சியில் பல்லலப்பள்ளி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கொத்தமல்லி, தீவனபயிர், சிறு கீரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தவவிட்டு இருந்தார். அதன்படி திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சித்ரகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஊராட்சிமன்ற தலைவர் சி.பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியை ஆக்கிரமித்து செய்யப்பட்ட பயிர்களை அகற்றினர்.
Related Tags :
Next Story