வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 April 2022 12:05 AM IST (Updated: 8 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

காரைக்குடி, 
திருப்பத்தூர் ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் சரண்யா (வயது 34). இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா காதி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (37) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 35 பவுன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் பெண் வீட்டார் தரப்பில் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த 6 மாதங்களுக்கு பின்னர் மேலும் 15 பவுன் வேண்டுமென சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் சரண்யாவிடம் கேட்டு துன்புறுத்தி வீட்டை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்பின் சரண்யா சிவகங்கை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு இருவரையும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியது. அதன் பேரில் சரண்யா அவரது கணவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் சதீஷ் குமாரும், அவரது பெற்றோரும் 15 பவுன் நகைகளை கொண்டு வராவிட்டால் வீட்டை விட்டு வெளியே போ என்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.. இது குறித்து சரண்யா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சரண்யாவின் கணவர் சதீஷ்குமார், மாமனார் செல்வராஜ், மாமியார் தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story