நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், பென்னாகரம் அடுத்த அரகாசனஅள்ளி அருகேயுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 47) மற்றும் சுப்ரமணி (58) என்பது தெரிய வந்ததது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதியமான்கோட்டை போலீசார், அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story