தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மீது தாக்குதல்
தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தர்மபுரி, ஏப்.8-
தர்மபுரி அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரரை தாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
கடத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஆபித் அலி (வயது 32). இவர் தர்மபுரியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடத்தூரில் பணியை முடித்துவிட்டு தர்மபுரி வருவதற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் படுத்திருந்த ஒருவரை எழுந்து அமர்ந்து கொள்ளுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆபித் அலியை தரக்குறைவாக பேசி ஓடும் பஸ்சிலேயே தாக்கினார்.
வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து தர்மபுரி பெரியார் சிலை அருகே பஸ்சில் இருந்து இறங்கியபோது அந்த நபர் மேலும் சிலரை வரவழைத்து ஆபித் அலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆபித்அலி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story