பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில் தர்மபுரி வரை நீட்டிப்பு


பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில் தர்மபுரி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 8 April 2022 12:09 AM IST (Updated: 8 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில் தர்மபுரி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பாலக்கோடு:
பெங்களூருவில் இருந்து பாலக்கோடு வழியாக ஓமலூர் வரை மின்சார ரெயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து முடிவடைந்து உள்ளது. இதில் முதற்கட்டமாக பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஓசூரில் இருந்து தர்மபுரி ரெயில் நிலையம் வரை இந்த மின்சார ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 06577 என்கிற வண்டி எண் கொண்ட ரெயில் பெங்களூருவில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு ஓசூர், ராயக்கோட்டை, பாலக்கோடு உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 10.45 மணிக்கு தர்மபுரி ரெயில் நிலையத்தை வந்தடைய உள்ளது. மின்சார ரெயில் தர்மபுரி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story