மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு
Published on

ஆண்டிமடம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சூரக்குழி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சதீஷ்(வயது 23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் மெக்கானிக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் தஞ்சாவூர் சாவடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சதீஷின் தாய் மலர்க்கொடி கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com