ஆலந்துறையார் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி


ஆலந்துறையார் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி
x
தினத்தந்தி 8 April 2022 12:42 AM IST (Updated: 8 April 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்துறையார் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி நடந்துள்ளது.

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் மிகப்பழமையான ஆலந்துறையார் கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலில் சிறப்புவாய்ந்த பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தபோது, அதில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் இடைவிடாமல் ஒலித்தது. இச்சம்பவம் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அலாரம் சத்தம் தொடர்ந்து ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார். இந்நிலையில் அலாரம் சத்தம் கேட்டு கோவிலுக்கு அருகில் இருந்த கீழப்பழுவூர் போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலாரம் ஒலித்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் தப்பிய சம்பவம் பக்தர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story