வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:-
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (வயது25). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் குணசீலன் (27). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாசிநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்தனர். அதேபோன்று குமரகிரிபேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. மேலும் சிலரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, குணசீலன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் மாரிமுத்து, குணசீலன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story