எலக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயற்சி
எலக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்றது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி:-
எடப்பாடி பயணிகள் மாளிகை முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபிலால் (வயது 35), பர்வீன் (21) ஆகியோர் இணைந்து எலக்ட்ரிக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க கோபிலால் வந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று கோபிலாலை தாக்கி, காரில் கடத்த முயன்றது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சிலர், அவர்களை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து எடப்பாடி போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த கோபிலாலை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் ராம் (29), யஸ்வந்த் (22), மகேந்திர குமார் (26), அமர்சிங் (27), தனராம் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் பர்வீனின் அத்தை மகன் பரத் என்பவர் உறவினர் என்ற முறையில் அடிக்கடி கடைக்கு வந்து சென்றுள்ளார். மேலும் அவர்கள் 5 பேரிடமும் ரூ.6 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. இதனால் பரத்தை தேடிக்கொண்டு எடப்பாடி வந்த 5 பேரும் கோபிலாலை கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அர்ஜூன்ராம், யஸ்வந்த், மகேந்திர குமார், அமர்சிங், தனராம் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story