கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 1:39 AM IST (Updated: 8 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசலில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைவாசல்:-
 தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழக சமத்துவ கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி, மாநிலத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கட்டுமான பொருள்களான சிமெண்டு, செங்கல், கம்பி, ஜல்லி உள்பட பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில அமைப்பு செயலாளர் செல்வம், துணைத் தலைவர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, தலைவாசல் ஒன்றிய தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் ராம்கி உள்பட கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைவாசல் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story