குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு


குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 April 2022 3:00 AM IST (Updated: 8 April 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

நாகா்ேகாவில் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பாிதாபமாக இறந்தாா்

நாகர்கோவில்:
நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஜெயந்திக்கு சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு சூரங்குடி ஆகும். இந்தநிலையில் ஜெயந்தியின் சகோதரருக்கு கடந்த 4-ந் தேதி திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக லோகேஸ்வரன் குடும்பத்துடன் வடக்கு சூரங்குடிக்கு வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். நேற்று மாலை அருகில் உள்ள சின்னக்குளத்துக்கு குளிக்கச் சென்ற லோகேஸ்வரன் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்து தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி லோகேஸ்வரனை தேடினர். அப்போது, லோகேஸ்வரன் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story