இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2022 3:06 AM IST (Updated: 8 April 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் பல்வேறு  இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் வீராச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.  நிர்வாக குழு உறுப்பினர் அய்யாதுரை, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மேலும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி, மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சொக்கநாதன்புத்தூர் பகுதிகளில் தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். தெருவிளக்கு, சுகாதார வசதி செய்து தரக் கோரியும் துரைச்சாமிபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் பகத்சிங், பொருளாளர் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யணன், பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story